கலா பொல 2020

பதிவுக்கான விண்ணப்பப்படிவம்




    ஓவியம்

    ஒயில்
    அக்ரிலிக்
    வோட்டர் கலர்
    டிஜிட்டல் ஆர்ட்
    ஏனையவை (தயவு செய்து குறிப்பிடவும்) *


    ஆம்இல்லை





    அணைத்து கலைஞருக்கும், அழைக்கப்பட்டோருக்கும், வருகை தருபவர்களுக்கு ஒரு கையேடு வழங்கப்படும். புகைப்படம் 6”x4” என்ற அளவில் 250 pixel பிரதி திறனுக்கு மேற்பட்ட ஒன்றாக இருத்தல் வேண்டும்.



    சிற்பம்

    கல்
    உலோகம்
    மட்பாண்டம்
    மரம்
    ஏனையவை (தயவு செய்து குறிப்பிடவும்)*


     

    கலாபொல 2020 நிகழ்வில்பங்குபற்றுவதற்கானநிபந்தனைகள்

    1. நிகழ்வு - 2020 பெப்ரவரி 23 ஆம் திகதி மு.ப. 8.00 மணி முதல் பி.ப 8.00 மணி வரை கொழும்பு 7 இல் ஆனந்த குமாரசுவாமி வீதியில் இடம்பெறவுள்ளது.

    2. தகைமைபெறுகின்ற கலைப்படைப்புக்கள் - கலாபொல ஆனது ஓவியங்கள் மற்றும் சிற்பங்களை உள்ளடக்கி திறந்தவெளியில் இடம்பெறுகின்ற ஒரு கலைச்சந்தையாகும். இதற்கமைவாக ஓவியங்கள், படங்கள், சித்திரங்கள், சிற்பங்கள் மற்றும் செதுக்கல் வேலைப்பாடுகள் (கைவினை வேலைப்பாடுகள் மற்றும் முகமூடி தயாரிக்கும் பணிகள் அல்லாத) போன்ற எந்தவொரு படைப்பு ஊடகத்தின் வெளிப்பாட்டிலும் படைக்கப்படுகின்ற பார்க்கக்கூடிய ஆக்கத்திறன் கலைப்படைப்புக்கள் இந்நிகழ்வில்
      கண்காட்சிக்கு வைக்கப்பட்டு, விற்பனை செய்வதற்கு தகைமை உடையவை. இதில் பங்குபற்றுவர்கள் காட்சிப்படுத்தும் கலைப்படைப்புக்களின் எண்ணிக்கை தொடர்பில் எவ்வித வரையறைகளும் கிடையாது என்பதுடன் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடைவெளியில் கொள்ளக்கூடிய எத்தனை கலைப்படைப்புக்களையும் அவர்கள் காட்சிப்படுத்த முடியும். பதிக், கைவினைப்பொருட்கள் மற்றும் வாழ்த்து அட்டைகள், பச்சை குத்துதல் மற்றும் உடல் கலை ஆகியவை விற்பனை செய்யப்படல் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளன.

    3. தகைமைபெறுகின்ற கண்காட்சியாளர்கள் - இத்துறையில் நேரடியாக ஈடுபட்டுள்ள கலைஞர்கள் மட்டுமே இதில் பங்குபற்ற முடியும். மூன்றாம் தரப்பினர் (உ-ம். முகவர்கள் அல்லது கலைப்படைப்புக்களின் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள்) இதில் பங்குபற்றுவதற்கு தகைமையற்றவர்கள்.

    4. முற்பதிவு – பதிவு இணையத்தின் வழியாக மாத்திரம் இடம்பெறும். பதிவுசெய்யப்படும் வரிசை படியே தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்ப படிவத்தை இணையதளத்தில் கொள்ளுதல் இல் பெற்றுகொள்ளலாம் . கூடாரங்களில் எண்ணிக்கை அடிப்படியில் 2020 பிப்ரவரி 07 ஆம் திகதிக்குள் பதிவுகள் மூடப்படும். பதிவு கட்டணமாக ஒரு கூடாரத்துக்கு ரூ. 1500ஃ- (ரூபாய் ஆயிரத்து ஐந்நூறு மாத்திரம்) ஆன்லைன் விண்ணப்ப போர்டல் மூலம் ஆன்லைனில் செலுத்தப்பட வேண்டும் (இவை அனைத்தும் கலை மற்றும் கலைஞர்களின் மேம்பாட்டில் அதன் பிற நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதற்காக ஜோர்ஜ் கீற் அறநிதியத்திற்கு வரவு வைக்கப்பட்டுள்ளது). பதிவுக்கட்டணம் எக்காரணத்தைக் கொண்டும் திரும்பி கொடுக்கப்படாது. பதிவு உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும் கலா பொலவின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறினால் எந்தவொரு விண்ணப்ப படிவத்தையும் நிராகரிக்கும் உரிமையை ஜோர்ஜ் கீற் அறநிதியம் கொண்டுள்ளது.

    5. காட்சிக்கூடத்திற்கான இட ஒதுக்கீடு - கூடார எண்கள் பதிவு செய்யும் வரிசையில் ஒதுக்கப்படும், அதாவது, முதலில் வருபவர்களுக்கு முதல் கூடாரம் என்ற அடிப்படையில் வழங்கப்படும். ஆன்லைன் பதிவுகள் தவிர்த்து நிகழ்வின் நாளில் வேறு எந்த பதிவுகளும் ஏற்றுக்கொள்ளப்படாது. தகுதியான விண்ணப்பதாரர்கள் பதிவை உறுதிப்படுத்தும் மின்னஞ்சலை (விண்ணப்ப படிவத்தில் வழங்கப்பட்ட முகவரிக்கு) பெறுவார்கள். இதில் பதிவு எண் மற்றும் கூடார எண் என்பன குறிப்பிடப்பட்டிருக்கும். பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு கலைஞருக்கும் ஒரு கூடார இடம் வழங்கப்படும், மேலும் ஒவ்வொரு கூடார இடத்தையும் ஒரு பங்கேற்பாளர் மட்டுமே ஆக்கிரமிக்க முடியும். எந்தவொரு பதிவுசெய்யப்பட்ட கலைஞரும் மற்றொரு பயிற்சி பெற்ற கலைஞருடன் கூடாரத்தினை பகிர்ந்து கொள்ள விரும்பினால், அவர் ஆன்லைன் பதிவு படிவத்தின்படி பகிர்வு கலைஞரின் விவரங்களுடன் ஒழுங்கமைப்பாளர்களுக்கு முன் அறிவிப்பை வழங்க வேண்டும்.

    6. கலா பொல நினைவுக் கையேடு - தகைமையினை உறுதிப்படுத்திக்கொள்ளும் நடைமுறை தொடர்பான நோக்கங்களுக்காக ஒவ்வொரு கலைஞரும் இந்நிகழ்வில் காட்சிப்படுத்த விரும்புகின்ற தமது சொந்த ஓவியம் அல்லது செதுக்கல் கைவண்ணத்தின் புகைப்படத்தை ஆன்லைன் படிவத்துடன் அனுப்பிவைத்தல் வேண்டும். அணைத்து கலைஞருக்கும், அழைக்கப்பட்டோருக்கும், வருகை தருபவர்களுக்கு ஒரு கையேடு வழங்கப்படும். புகைப்படம் 6”x4” என்ற அளவில் 250 pixel பிரதி திறனுக்கு மேற்பட்ட ஒன்றாக இருத்தல் வேண்டும்.

    7. கலைப்படைப்புக்கள் மற்றும் பிரத்தியேக உடமைகளின் பாதுகாப்பு - தங்களது கலைப்படைப்புக்கள் மற்றும் அவற்றைக் காட்சிப்படுத்துவதற்கான துணைப்பொருட்களை கண்காட்சி நடைபெறுகின்ற இடத்திற்கு எடுத்துவருதல், நிகழ்வில் காட்சிப்படுத்தப்படும் கலைப்படைப்புக்களின் பாதுகாப்பு மற்றும் அவற்றின் விற்பனை, நிகழ்வின் பின்னர் கலைப்படைப்புக்கள் மற்றும் துணைப்பொருட்களை அங்கிருந்து அப்புறப்படுத்தல் அடங்கலாக தமது கலைப்படைப்புக்கள் மற்றும் துணைப்பொருட்கள் தொடர்பான எந்தவொரு நடவடிக்கைக்கும் பங்குபற்றும் கலைஞரே முழுப் பொறுப்பையும் ஏற்கவேண்டும். ஜோர்ஜ் கீற் அறநிதியமோ அல்லது ஜோன் கீல்ஸ் குழுமமோ எந்தவொரு கலைப் படைப்புகளின் பாதுகாப்பிற்காகவோ அல்லது பங்கேற்பாளர்களின் தனிப்பட்ட விளைவுகளுக்காகவோ எந்தவொரு பொறுப்பையும் ஏற்காது.

    8. வசதிகள் - பங்குபற்றுபவர்கள் தமக்கான உணவு மற்றும் குடிநீரை ஏற்பாடு செய்வது அவர்களது பொறுப்பாகும். முடிந்த அளவிற்கு சௌகரியமான இடத்தில் மலசலகூட வசதிகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன. அவற்றை உபயோகிப்பவர்கள் ஏனையவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கவனத்துடன் உபயோகித்தல் வேண்டும்.

    9. மேசைகள் மற்றும் நாற்காலிகள் - மேசைகள் அல்லது பிற தளபாடங்கள் தேவைப்படும் பங்கேற்பாளர்கள் தாங்களாகவே ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் அல்லது 011-2304583 என்ற எண்ணில் கேன் பேர்னிஷிங் ஹவுஸினை தொடர்பு கொள்ளவேண்டும். தளபாடங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்ட விஷயத்தில், பங்கேற்பாளர்கள் உரிய கொடுப்பனவுகளை உறுதிசெய்து, அத்தகைய அனைத்து பொருட்களையும் சரியான நேரத்தில் மற்றும் நல்ல நிலையில் திருப்பித் தர வேண்டும். கூடுதல் தளபாடங்கள் ஏற்பாடுகள், அவற்றின் வாடகை அல்லது பாதுகாப்பு ஆகியவற்றிற்கு ஜார்ஜ் கீட் அறநிதியமோ அல்லது ஜான் கீல்ஸ் குழுவோ பொறுப்பேற்காது.

    10. நிகழ்வு தொடர்பான கருத்து - பங்குபற்றுபவர்கள் அனைவரும் நிகழ்வு இடம்பெறும் இடத்தை விட்டு அகலும் முன்னர் நிகழ்வு தொடர்பான கருத்து படிவத்தை பூர்த்தி செய்து ஒப்படைத்தல் வேண்டும்

    11. தவிர்க்கப்படவேண்டிய விடயங்கள் - நிகழ்வு இடம்பெறும் இடத்தில் இதில் பங்குபற்றுவர்கள் பின்வரும் விடயங்களைத் தவிர்த்தல் வேண்டும்:

      • மரங்கள், புற்தரை, தடுப்புவேலிகள், மின்விளக்கு கம்பங்கள், நடைபாதை போன்றவை உள்ளடங்கலாக பொதுச் சொத்திற்கு சேதம் விளைவித்தல்

      • எந்தவொரு தனியார் உடமைக்கும் சேதம் விளைவித்தல்

      • காட்சிக்கூடத்தின் பொருத்தல் இணைப்புக்கள் அல்லது கலா பொல மற்றும் ஜோன் கீல்ஸ் குழுமத்தின் விளம்பரப் பதாகைகளுக்கு சேதம் விளைவித்தல்

      • பிரதேசத்தில் குப்பைகூளங்களை வீசுதல்

      • பொதுமக்கள் மற்றும் பங்குபற்றும் சக கலைஞர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அநாகரிகமாக கொள்ளுதல்

      • ழ பிரதேசத்தில் குப்பைகூளங்களை வீசுதல்

      • ழ பொதுமக்கள் மற்றும் பங்குபற்றும் சக கலைஞர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அநாகரிகமாக கொள்ளுதல்

    12. காட்சிக்கூடங்களை மீளக்கையளித்தல் - பங்குபற்றுபவர்கள் அனைவரும் 2020 பிரப்ரவரி 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப 9.00 மணிக்கு நிகழ்வு இடம்பெறும் இடத்தை விட்டு வெளியேறல் வேண்டும். காட்சிக்கூடத்தில் கலா பொல அல்லது ஜோன் கீல்ஸ் குழுமத்தால் காட்சிப்படுத்தப்பட்ட விளம்பரப் பலகைகளை பாதுகாப்பாக திருப்பி ஒப்படைப்பதை உறுதிசெய்தல் வேண்டும்.